AK64 : ‘AK64’-க்காக மீண்டும் அஜித்துடன் கைகோர்க்கும் ரஜினி பட இயக்குநர்!

  • February 1, 2024 / 04:59 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ கடந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘விடாமுயற்சி’-க்கு பிறகு அஜித்தின் 63-வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட புகழ் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கிறது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது, அஜித்தின் 64-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இயக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, சிவா இயக்கத்தில் அஜித் ‘வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ ஆகிய படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அஜித் – சிவா கூட்டணியில் உருவாகும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus