முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ கடந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
‘விடாமுயற்சி’-க்கு பிறகு அஜித்தின் 63-வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட புகழ் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கிறது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ஆரம்பம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் நயன்தாரா, டாப்சி, ஆர்யா, ராணா டகுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இப்படத்துக்காக நடிகர் அஜித் ரூ.18 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.