அடேங்கப்பா… ‘விடாமுயற்சி’-க்காக அஜித்துக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

  • October 13, 2023 / 11:25 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் அஜித் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார், த்ரிஷா,
ரெஜினா கசாண்ட்ரா என 2 ஹீரோயின்ஸ் நடிக்கின்றனர். மேலும், நெகட்டிவ் ரோல்களில் சஞ்சய் தத், ‘பிக் பாஸ்’ ஆரவ் நடிக்கின்றனர்.

‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அஜர்பைஜானில் ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக அஜித்துக்கு ரூ.105 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus