Vidaamuyarchi : அஜித்தின் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் ஒத்தி வைப்பு… வருத்தத்தில் ரசிகர்கள்!

  • February 10, 2024 / 12:11 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ கடந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் அஜித் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா என 2 ஹீரோயின்ஸ் நடிக்கின்றனர். மேலும், நெகட்டிவ் ரோல்களில் சஞ்சய் தத், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், ‘பிக் பாஸ்’ ஆரவ் நடிக்கின்றனர்.

‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் இப்படம் வருகிற மே 1-ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. தற்போது, படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus