அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் ‘விடாமுயற்சி’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

  • July 12, 2023 / 07:18 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதியிலிருந்து ஹைதராபாத்தில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus