முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை இந்த மாதம் (செப்டம்பர்) இறுதியிலிருந்து துபாயில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, துபாயில் இருக்கும் அஜித் நடிகர் சஞ்சய் தத்தை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Exclusive
Latest Pic Of THALA Ajith Sir with Bollywood Actor @duttsanjay in Dubai ❤️
Expect The Unexpected #VidaaMuyarchi | #AjithKumar pic.twitter.com/7cqVmVfaod
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) September 19, 2023