தமிழ் சினிமாவில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் S.S.சக்ரவர்த்தி. இவர் தனது ‘நிக் ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்திருக்கிறார்.
அஜித்தின் ‘ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு’, விக்ரமின் ‘காதல் சடுகுடு’, சிலம்பரசனின் ‘காளை, வாலு’ ஆகிய படங்களை தயாரித்த ‘நிக் ஆர்ட்ஸ்’ S.S.சக்ரவர்த்தி விமலின் ‘விலங்கு’ வெப் சீரிஸில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
தற்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் ‘நிக் ஆர்ட்ஸ்’ S.S.சக்ரவர்த்தி இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.