அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படங்கள் பற்றி ஒரு பார்வை பார்ட் 2 !

  • January 5, 2023 / 10:05 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் . நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் துணிவு படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது . இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் இதுவரை பொங்கலுக்கு வெளியான படங்கள் ( பகுதி 2 )பற்றி காண்போம் . அஜித் படங்கள் ( பகுதி 1 ) படிக்க கீழே உள்ள லிங்கை தொடரவும்

பார்ட் 1 : https://tamil.filmyfocus.com/ajith-movies-released-at-pongal-festival-part-1

4. தீனா

தீனா படம் 2001 ஆம் ஆண்டு வெளியான அதிரடி ஆக்ஷன் இந்த திரைப்படத்தை , ஏ.ஆர். முருகதாஸ் எழுதி இயக்கி இருந்தார் . இது அவரின் முதல் படமாகும் . நடிகர் அஜித் குமாரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற படம் என்றும் கூறலாம் . லைலா நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்து இருந்தார் . யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார் . இந்த படம் 14 ஜனவரி 2001 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

5. ரெட்

ரெட் படம் சிங்கம்புலி (ராம் சத்யா என்ற பெயரில்) இயக்கிய படமாகும் . எஸ் எஸ் சக்ரவர்த்தி தயாரிப்பில் 2002 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது . இப்படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக பிரியா கில் நடித்து இருந்தார் . மணிவண்ணன், சலீம் கவுஸ் மற்றும் ரகுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் . படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலிப்பதிவுக்கு தேவா இசையமைத்துள்ளார்.

படம் 14 ஜனவரி 2002 அன்று வெளியாகி விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ஓரளவு வெற்றிப்பெற்றது .

6. பரமசிவன்

பரமசிவன் என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும் . இந்த படத்தை பி. வாசு இயக்கி இருந்தார் . எஸ். ரமேஷ் பாபு தயாரித்தது. இருந்தார் அஜித்குமாருக்கு ஜோடியாக லைலா நடித்து இருந்தார் . ஜெயராம், விவேக், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் . இது 14 ஜனவரி 2006 அன்று வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus