மீண்டும் வெளிநாடு செல்லும் அஜித் !

  • December 2, 2022 / 10:38 AM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

2023 -ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறார் . பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்க படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது . தற்போது டப்பிங் பணிகள் விரைவாக நடந்து வருகிறது . நடிகர் அஜித் தனது டப்பிங் பணிகளை முடித்து விட்டார் .

 

ஜிப்ரான் இசையில் ” சில்லா சில்லா ” என்கிற பாடலை அனிருத் பாடியுள்ளார் . இந்த பாடலை வைசாக் என்பவர் எழுதி உள்ளார் . சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘ காக்கா கதை ‘ பாடலை எழுதியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது . விரைவில் இந்த பாடல் வெளியாக உள்ளது .

இந்நிலையில் துணிவு படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது . இதனை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது மீண்டும் வெளிநாட்டு சுற்று பயணத்திற்கு சென்று உள்ளார் . சென்னை விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ வைராலகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus