மகிஷ்திருமேனியையும் கிழட்டி விட்டாரா அஜித் ?

  • February 9, 2023 / 10:00 AM IST

நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது .இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தனது 62 -வது படத்தில் நடிக்க உள்ளார் என்று 8 மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது .

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் விக்னேஷ் சொன்ன கதை லைக்கா நிறுவனத்திற்கும் நடிகர் அஜித்திற்கு திருப்தி அளிக்கவில்லை அதனால் விக்னேஷ் சிவன் – அஜித் படம் உருவாகவில்லை . அஜித் விக்னேஷ் சிவனை நிராகரித்து விட்டார் என்று கூறப்படுகிறது .

இதனால் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை யார் இயக்க உள்ளார் என்று கேள்வி எழுந்து உள்ளது . சமூக வலைத்தளங்களில் மகிழ் திருமேனி தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு நடிகர் அஜித்துக்கு கதை சொல்லி உள்ளார் என்று கூறப்படுகிறது. வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார் ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus