சென்னை திரும்பிய அஜித்… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் & வீடியோ!

  • February 16, 2023 / 09:55 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்துள்ள புதிய படமான ‘துணிவு’ கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

இதன் ஷூட்டிங் மிக விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது. சமீபத்தில், அஜித் ஸ்காட்லாந்திற்கு சென்றிருந்தார். தற்போது, அஜித் சென்னைக்கு வந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus