கால்பந்தாட்ட போட்டியில் பதக்கம் வென்ற அஜித்தின் மகன் ஆத்விக்… வைரலாகும் ஸ்டில்ஸ்!
October 17, 2023 / 08:13 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அஜர்பைஜானில் ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
‘விடாமுயற்சி’-க்கு பிறகு அஜித்தின் 63-வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட புகழ் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இதனை ‘RS இன்ஃபோடெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கவிருக்கிறார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.
இந்நிலையில், அஜித்தின் மகன் ஆத்விக் சென்னை FC அணியின் கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றதாக தகவல் கிடைத்துள்ளது. ஆத்விக் கால்பந்து விளையாடும் போதும், பதக்கம் வாங்கும்போதும் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Kutty THALA #Aadvik Got a Medal For Grassroot Academy winning..