அஜித்தின் மகன் ஆத்விக்… ‘குட்டி தல’யின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

  • January 27, 2021 / 07:41 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கி சில நாட்கள் தொடர்ந்து நடந்தது.

அதன் பிறகு அடுத்த ஷெடியூல் ஷூட்டிங் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்கள் நடைபெற்றது. இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அஜித்தின் மகன் ஆத்விக்கின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus