முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.
இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம்.
இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு பிறகு அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். இந்நிலையில், அஜித்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.