‘வலிமை’யில் சண்டைக் காட்சி ஷூட்டிங்… விபத்தில் சிக்கிய அஜித்!

  • November 20, 2020 / 11:58 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.

கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கி சில நாட்கள் தொடர்ந்து நடந்தது. புதிய ஷெடியூல் ஷூட்டிங் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஷூட்டிங்கில் சண்டைக் காட்சி எடுக்கும்போது விபத்து ஏற்பட்டு அஜித்துக்கு காயமானதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே, அதற்கு சிகிச்சை எடுத்து கொண்டு மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டாராம் அஜித். இப்போது நலமாக இருக்கும் அஜித் சென்னைக்கு திரும்பி விட்டார் என்று சொல்லப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.