உலகம் முழுவதும் பைக்கில் பயணிக்க நடிகர் அஜித் போட்ட மாஸ் ப்ளான்!

  • May 9, 2023 / 11:04 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை வருகிற மே 22-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் அஜித் நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பைக்கில் பயணித்து முடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், வருகிற நவம்பர் மாதத்திலிருந்து உலகம் முழுவதும் பைக்கில் பயணிக்க அஜித் ப்ளான் போட்டிருக்கிறாராம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus