‘வலிமை’யை தொடர்ந்து அஜித் நடிக்கப்போகும் 2 படங்கள்… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் ரிலீஸ் செய்தது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்க உள்ளாராம்.

இந்த படத்துக்கான ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், அஜித்தின் 62-வது படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ தயாரிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். மிக விரைவில் ‘தல 62’வின் இயக்குநர் யார்? என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.