முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.
இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம்.
இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கு பிறகு அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார்.
‘தல’ அஜித் நடிப்பில் 2003-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆஞ்சநேயா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான N.மகாராஜன் இயக்கியிருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரகுவரன், சீதா, ரமேஷ் கண்ணா, கோவை சரளா, FEFSI விஜயன், பி.வாசு, இளவரசு மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் உலக அளவில் ரூ.21.15 கோடி வசூல் செய்ததாம்.