2012-யில் அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • August 24, 2022 / 02:38 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம்.

இதில் அஜித்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கு பிறகு அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார்.

‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பில்லா’. 1980-யில் ரஜினி நடித்து ஹிட்டான ‘பில்லா’ படத்தின் ரீமேக் வெர்ஷனான இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இதன் இரண்டாம் பாகம் 2012-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் சக்ரி டோலட்டி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் பார்வதி ஓமனகுட்டன், வித்யூத் ஜாம்வால், சுதன்ஷு பாண்டே மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் உலக அளவில் ரூ.72 கோடி வசூல் செய்ததாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus