போனி கபூர் – அஜித் உறவில் விரிசல் ?

  • November 21, 2022 / 12:12 AM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

2023 -ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறார் . பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்க படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது . பாடல் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது .


மேலும் துணிவு படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முடித்துவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அஜித் முதல் பாதி படத்தின் டப்பிங் மட்டுமே முடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இதற்கு காரணம் தயாரிப்பாளர் போனி கபூர் நடிகர் அஜித் அவர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் பணம் பாக்கி வைத்துள்ளார் என்றும் அதை முழுமையாக தந்தால் தான் மீதி டப்பிங் பணிகளை முடித்து தருவதாக கூறி உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது .

விரைவில் போனி கபூர் அந்த சம்பள பணத்தை திருப்பி தந்து விடுவார் என்றாலும் போனி கபூர் மற்றும் அஜித்தின் நட்பு உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளது இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் இணைவது கடினம் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus