தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.
எனினும் இவரது ஆரம்ப காலகட்டங்களில் பல போராட்டங்களை சந்தித்த பிறகு தான் இந்த இடத்தை எட்டியுள்ளார். இதுவரை சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் அஜித் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
இவர் தனக்கென எண்ணிலடங்காத ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவரின் ஆரம்ப காலகட்டத்தில் மைல் கல்லாக அமைந்த படம் வசந்த் இயக்கத்தில் வெளியான ஆசை திரைப்படம் என்று கூறலாம்.
இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் பிரகாஷ்ராஜ் ஏற்கனவே பிரபலமான ஒரு நடிகர் என்பதால் அவரிடம் நான் நல்லா வருவேனா சார் என்று கேட்டுக்கொண்டே இருப்பாராம் அஜித். அதற்கு பிரகாஷ்ராஜும் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறாய் உனக்கு என்ன கண்டிப்பாக நல்ல உயரத்திற்கு வருவாய் என்று கூறுவாராம்.
இந்த படத்தின் ப்ரீமியர் ஷோ பார்ப்பதற்காக மிக ஆவலுடன் வந்த அஜீத் அங்கு அதிகமான பெயர் புகழ் எல்லாம் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜின் நெகட்டிவ் ரோலிற்கு கிடைத்ததை பார்த்து சிறிது ஏமாற்றம் அடைந்தாலும் பிரகாஷ்ராஜிடம் சென்று இந்த படத்தில் பெயர் புகழ் எல்லாம் உங்களுக்கு கிடைத்துள்ளது, எனக்கு அதில் மிகவும் மகிழ்ச்சி இருப்பினும் உங்களைப்போல ஒரு நெகட்டிவ் ரோலில் நடித்து ஒருநாள் பெயர் புகழ் எடுப்பேன் என்று சபதம் எடுத்தாராம்.
தனது சபதத்தை அஜித் நிறைவேற்றிய படம்தான் எஸ்ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படம். இந்த திரைப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்தது மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தை விட இவரது நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததற்கு பலரிடம் பாராட்டுக்களை குவித்தார். சொன்னதைப் போலவே அஜித் செய்து காட்டியுள்ளார் என்று பின்பு பிரகாஷ்ராஜ் அவரை பாராட்டினாராம்.