அஜித்தின் மங்காத்தா திரைப்பட நடிகைக்கு கொரோனா !

  • July 14, 2020 / 10:36 PM IST

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ள நிலையில், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த “மங்காத்தா” என்ற படத்தில் நடித்த ரேச்சல் வைட் என்ற நடிகைக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதைப் பற்றி அவரே தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். கொல்கத்தாவில் வசித்து வந்த இவர் பெங்காலி மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் அஜித்தின் மங்காத்தா படத்தில் அறிமுகமான இவர், தற்போது கொரோனா காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெளியிட்டுள்ளார்.

இவர் தன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “இரண்டு நாட்களாக உங்கள் ஆசீர்வாதத்திற்கும் வேண்டுதலுக்கும் எனது மிகப்பெரிய நன்றி. நான் இரண்டு நாட்களாக எனது கால்களுக்கும் மெசேஜ்களுக்கும் ரிப்ளை பண்ணவில்லை, அதற்கு மன்னித்துவிடுங்கள். கொரோனா பாசிட்டிவ் வந்தது ஜீரணித்துக்கொள்ள இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இவ்வளவு கவனமாக இருந்தும் எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் எந்த இடத்தில் தவற விடுகிறோம் என்பது நமக்கு தெரியாது. அதனால் முடிந்த அளவு டாக்டர் கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுங்கள். சமூக விலகலை கடைபிடியுங்கள். கொல்கத்தாவில் இருக்கும் மெடிகா சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்கு எனது நன்றி. மீண்டும் உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி. அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருங்கள். இந்த வைரஸ் மிகவும் குழப்பமானது, நாம் தெளிவாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாபச்சன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus