முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.
ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற ஏப்ரல் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகர் ‘தல’ அஜித் – இயக்குநர் வெங்கட் பிரபு காம்போவில் ‘மங்காத்தா’ என்ற படம் 2011-ஆம் ஆண்டு வெளியானது.
இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது. ஆகையால், இப்படத்தினை வெற்றிப் படமாக்கி அழகு பார்த்தனர் அஜித் ரசிகர்கள். தற்போது, இந்த படத்தை வாங்கி வெளியிட்ட ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் ட்விட்டரில் ‘மங்காத்தா’ பட ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை யாரும் பார்த்திராத இந்த ஸ்டில்லில் இப்படத்தின் ஹீரோ, ஹீரோயினான அஜித்தும், த்ரிஷாவும் இருக்கிறார்கள். இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Here’s an unseen still from #Mankatha! How do you like it?#ThalaAjith #Trisha #FromOurVault pic.twitter.com/F0RXhupDAC
— Sun Pictures (@sunpictures) December 2, 2020