முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, அஜித்தின் 63-வது படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே, சிவா இயக்கத்தில் அஜித் ‘வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ ஆகிய படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அஜித் – சிவா கூட்டணியில் உருவாகும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். மிக விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.