நடிகர் அஜித் நடித்த ரெட் வெற்றி படமா ?

  • August 5, 2022 / 10:10 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும் படங்களில் ரெட் படமும் ஒன்று . சிங்கம்புலி இயக்கிய இந்த படத்தில் நடிகர் அஜித் மொட்டை அடித்துக்கொண்டு நடித்து இருப்பார் .இந்த படத்திற்கு தேவா இசையமைத்து இருந்தார் . 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 20 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றி பெற்றுள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus