சூப்பர் ஹிட்டான வெங்கட் பிரபுவின் ‘மங்காத்தா’-க்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • July 14, 2023 / 04:50 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதியிலிருந்து ஹைதராபாத்தில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். ‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மங்காத்தா’.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இதனை இயக்கியிருந்தார். இதில் அஜித் நெகட்டிவ் ஷேடில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் அஜித் ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus