ரஜினியிடம் போனில் பேசினாரா அஜித்?… உண்மையா, வதந்தியா?

  • August 15, 2020 / 06:31 AM IST

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது.

இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது. படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், ரஜினி திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் common dp-யை பல பிரபலங்கள் ட்விட்டரில் வெளியிட்டனர்.

இந்நிலையில், பிரபல நடிகர் ‘தல’ அஜித் இதற்காக ரஜினிக்கு போன் செய்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததாகவும், 30 நிமிடங்கள் இருவரும் பேசிக் கொண்டதாகவும் கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இது தொடர்பாக அஜித் தரப்பில் விசாரிக்கையில் “ரஜினி மீது அஜித் மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளார். ஆனால், பரவி வரும் இந்த தகவல் உண்மை அல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus