முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.
சமீபத்தில், இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் ரிலீஸ் செய்தது. இந்த ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இதனை இயக்கியிருந்தார். இதில் அஜித்தின் மகளாக வலம் வந்த அனிகா சுரேந்திரனுக்கு அதிக ஸ்கோப் இருந்தது. இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படம் 2007-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘துளசி’ என்ற தெலுங்கு படத்தின் காப்பி என தகவல் கிடைத்துள்ளது. வெங்கடேஷ் – நயன்தாரா ஜோடியாக நடித்திருந்த இந்த படத்தை போயபட்டி ஸ்ரீனு இயக்கியிருந்தார்.