முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.
இந்த படம் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி ரிலீஸானது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம். ‘துணிவு’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இதன் போஸ்டர்ஸ் மற்றும் ‘சில்லா சில்லா, காசேதான் கடவுளடா’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியானது.
இப்போஸ்டர்ஸ் மற்றும் ‘சில்லா சில்லா, காசேதான் கடவுளடா’ ஆகிய 2 பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில், ‘பிக் பாஸ்’ சிபி ட்விட்டரில் அஜித் தனக்கு கூலர்ஸை கிஃப்ட்டாக கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.
Will always treasure this invaluable memorabilia. A gift from #Ajithkumar sir during #KasethanKadavulada song shoot https://t.co/wKUI7Wms7Z pic.twitter.com/2Q9zftqxsX
— Ciby Bhuvana Chandran (@cibychandran) December 18, 2022