முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கிலாஸ்கோவில் இருந்து சென்னைக்கு தனது 10 மாத குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு அவரது சூட்கேஸை தூக்கிச் சென்று அஜித் உதவி செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அப்பெண்ணின் கணவரே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
— Ajith Telugu FC (@Ajith_TFC) April 14, 2023