சூப்பர் ஹிட்டான அஜித்தின் ‘துணிவு’… வெளியானது ‘சில்லா சில்லா’ பாடல் வீடியோ!

  • February 22, 2023 / 01:17 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்துள்ள புதிய படமான ‘துணிவு’ கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘சில்லா சில்லா’ பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus