அடேங்கப்பா… அஜித்தின் ‘துணிவு’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • April 6, 2023 / 01:55 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த ‘துணிவு’ திரைப்படம் இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் அஜித் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.200.02 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus