தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

  • January 13, 2023 / 01:36 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்துள்ள புதிய படமான ‘துணிவு’ நேற்று (ஜனவரி 11-ஆம் தேதி) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் (தெகிம்பு) நேற்று மட்டும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.2.15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus