முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.
இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது.
பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. அஜித் படம் என்றாலே, பைக் அல்லது கார் சேஸிங் காட்சிகள் இடம்பெறும். இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் வங்கியில் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பித்துச் செல்லும் வில்லன்களை அஜித் சேஸ் செய்து பிடிப்பாராம். இக்காட்சியில் அஜித் பஸ் ஓட்டிச் செல்வது போல் ஷூட் செய்யப்பட்டிருக்கிறதாம்.