‘வலிமை’ தீம் மியூசிக்கிற்காக அஜித் சொன்ன விஷயம்… மியூசிக்கல் அப்டேட் கொடுத்த யுவன்!

  • October 23, 2020 / 12:20 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.

சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கி சில நாட்கள் தொடர்ந்து நடந்தது. புதிய ஷெடியூல் ஷூட்டிங் இன்று (அக்டோபர் 22-ஆம் தேதி) முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ படம் பண்ணும்போதே என்னிடம் ‘மங்காத்தா, பில்லா 1 & 2-க்கு கிட்டார் வச்சு தீம் மியூசிக் பண்ணிட்டோம். இதுக்கு புதுசா ட்ரை பண்ணுங்க” என்று சொன்னார். ஆனா, ‘நேர்கொண்ட பார்வை’க்கு கிட்டார் பயன்படுத்த வேண்டியாத போயிடுச்சு. இந்த முறை ‘வலிமை’ல கிட்டார் பயன்படுத்தாம ஒரு சூப்பரான தீம் மியூசிக் கம்போஸ் பண்ணியிருக்கேன். ஏற்கனவே, இந்த படத்துக்கான மூன்று பாடல்கள் மற்றும் தீம் மியூசிக்கிற்கான கம்போஸிங் முடிச்சாச்சு” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus