நாளை ரிலீஸாகும் அஜித்தின் ‘வலிமை’… இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா?

  • February 24, 2022 / 08:13 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், Glimpse, மேக்கிங் வீடியோ, பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் ரிலீஸ் செய்தது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், Glimpse, மேக்கிங் வீடியோ, பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை நாளை (பிப்ரவரி 24-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், ரூ.150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையும் ரூ.96 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆகையால், இப்படம் உலகளவில் ரூ.185 கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus