அஜித்தின் வலிமை OTTயில் வெளியாகுமா என தயாரிப்பாளர் போனி கபூர் பதில்..!

  • June 24, 2020 / 02:32 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “வலிமை”. லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம் ,OTTயில் வெளிவரும் என்று ஒரு செய்தி பரவியது.

இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் போனி கபூர்” என்னைப் பொறுத்தவரை சில படங்கள் தியேட்டர் அனுபவங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. எனவே அவை முதலில் திரையரங்குகளில் ரிலீசாக வேண்டும். எனது புதிய படங்களை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதில் நான் பெருமை அடைகிறேன். எனது 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் நான் பல படங்களை தயாரித்துள்ளேன். அவை அனைத்துமே திரையரங்குகளில் தான் வெளியாகியுள்ளன.

எனது அனுபவத்தின் அடிப்படையில் அனைத்து தளங்களுமே நிலைத்திருக்கும். அது ஓடிடி, சினிமா, தொலைக்காட்சி எதுவாயினும். அவை அனைத்தும் செழித்து வளரும் என்று என்னால் நம்பிக்கையாக சொல்ல முடியும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதனால் வலிமை திரைப்படம் முதலில் OTTயில் வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus