அடேங்கப்பா… ‘வலிமை’ பட வில்லன் கார்த்திகேயாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திகேயா. இவருக்கு தெலுங்கு மொழியில் அமைந்த முதல் படம் ‘பிரேமதோ மீ கார்த்திக்’. இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘RX 100’ என்ற தெலுங்கு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. ‘RX 100’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் கார்த்திகேயாவிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஹிப்பி, குணா 369, நானி’ஸ் கேங் லீடர், 90 ML, சாவு கபரு சல்லகா, ராஜா விக்ரமார்க்கா’ என தெலுங்கு படங்கள் குவிந்தது. இப்போது, நடிகர் கார்த்திகேயா ‘வலிமை’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித்தின் படமான இதில் கார்த்திகேயாவுக்கு பவர்ஃபுல்லான வில்லன் ரோலாம்.

இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தை வருகிற ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். கடந்த ஆண்டு (2021) நவம்பர் 21-ஆம் தேதி நடிகர் கார்த்திகேயா லோஹிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகர் கார்த்திகேயாவின் சொத்து மதிப்பு ரூ.18 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.