அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக் : சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • August 7, 2023 / 05:36 PM IST

‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வேதாளம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இயக்கியிருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் லக்ஷ்மி மேனன், தம்பி இராமையா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்போது இப்படம் தெலுங்கில் ‘போலா ஷங்கர்’ என்ற பெயரில் ரீமேக்காகியிருக்கிறது. இதில் ஹீரோவாக டோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் கீர்த்தி சுரேஷ், சுஷாந்த், ரகு பாபு, முரளி ஷர்மா, ரவி ஷங்கர், வெண்ணிலா கிஷோர், துளசி, ஸ்ரீ முகி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் மெஹர் ரமேஷ் இயக்கியுள்ளார்.

படத்தை வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தை பார்த்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ட்விட்டரில் “படம் நன்றாக இல்லை” என்று குறிப்பிட்டதுடன் 5-க்கு 1 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே கொடுத்துள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus