அஜித்தின் ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கலை இயக்குநர் மிலன் மரணம்… வருத்தத்தில் திரையுலகினர்!
October 16, 2023 / 01:22 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் கலை இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் மிலன். இவர் ஆரம்பத்தில் கலை இயக்குநர் சாபு சிரிலிடம் உதவி கலை இயக்குநராக ‘சிட்டிசன், தமிழன், ரெட், வில்லன், அந்நியன்’ ஆகிய படங்களில் பணியாற்றினார்.
பின், மிலன் கலை இயக்குநராகி ‘கலாபக் காதலன், ஓரம்போ, பில்லா, ஏகன், வேட்டைக்காரன், வேலாயுதம், என்றென்றும் புன்னகை, வீரம், இசை, சிகரம் தொடு, ரோமியோ ஜூலியட், வேதாளம், விவேகம், சாமி ஸ்கொயர்’ ஆகிய படங்களில் பணியாற்றினார்.
தற்போது, அஜர்பைஜானில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங்கில் பணியாற்றி வந்த கலை இயக்குநர் மிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus