முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ கடந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் அஜித் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா என 2 ஹீரோயின்ஸ் நடிக்கின்றனர். மேலும், நெகட்டிவ் ரோல்களில் சஞ்சய் தத், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், ‘பிக் பாஸ்’ ஆரவ் நடிக்கின்றனர்.
‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் அஜர்பைஜானில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, அஜர்பைஜான் ஷெட்யூல் வெற்றிகரமாக நிறைவு பெற்றது என அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் அடுத்த ஷெட்யூல் ஆரம்பிக்கப்படுமாம்.