மிரட்டலான வில்லன் லுக்கில் அஜித்… வைரலாகும் புதிய ஸ்டில்!

  • July 30, 2020 / 08:17 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. தற்போது, பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அஜித்தின் முகம் ரசிகர் ஒருவரால் எடிட் செய்யப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை 29-ஆம் தேதி) பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பர்த்டே ட்ரீட்டாக, ‘கே.ஜி.எஃப் 2’ படத்தில் இருந்து அவரின் கேரக்டர் போஸ்டர் ரிலீஸாகியிருந்தது. அப்போஸ்டரில் உள்ள சஞ்சய் தத்தின் புகைப்படம் தான் அஜித்தாக மாற்றப்பட்டுள்ளது. அது கச்சிதமாக பொருந்திப் போனதால், அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். ‘கே.ஜி.எஃப் 2’ படத்தில் சஞ்சய் தத்திற்கு ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோல் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/studio9_suresh/status/1288518169091387395

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus