அஜித் திரைப்பட பாடலை பாடும் சீன தொகுப்பாளினி- வைரல் வீடியோ!

  • August 6, 2020 / 01:31 PM IST

சீனாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி நிலானி என்பவர் தமிழில் பேசி வெளியான வீடியோ இணையதளத்தில் ஏற்கனவே வைரலாகி அவரது கொஞ்சம் தமிழுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் அவர் சமீபகாலமாக எந்த ஒரு வீடியோவையும் வெளியிடாததால் நிலானி எங்கு என்று பலரும் இணையதளத்தில் தேடி வந்தார்கள். தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக தொகுப்பாளினி நிலானி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் அவர் “நிலானி எங்கே என்று பலரும் கேள்வி கேட்டனர். அதற்கு நான் இப்போது விடை தருகிறேன். இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றால் நான் ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். அவர்தான் என்னுடைய குழந்தை. எனக்கு குழந்தை பிறந்துள்ளதால் தான் நான் விடுமுறை எடுத்திருந்தேன். என் குழந்தைக்கு “சியாவ் மன்” என்று பெயரிட்டுள்ளேன். அதற்கு ‘வாழ்வில் எப்போதும் மனநிறைவுடன் இருத்தல்’ என்று அர்த்தம்”என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் “இதேபோல் தமிழில் இவருக்கு பெயர் வைக்க நான் விரும்புகிறேன். எனக்கு ஒரு நல்ல தமிழ் பெயரை அறிமுகம் செய்யுங்கள். மேலும் அதற்கான அர்த்தத்தையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்’என்று கூறியிருக்கிறார்.

இதைக் கூறி முடித்த பின்பு அஜித் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” படத்தில் வரும் “கண்ணான கண்ணே” பாடலை தாலாட்டுப் பாடலாக பாடி குழந்தையை உறங்க வைத்தார். இந்த வீடியோவை வைரலாக்கி அஜித் ரசிகர்கள் அஜித்தின் படப்பாடல் சீனா வரை ஒலிக்கிறது என்று உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus