பண்டிகை நாட்களை குறிவைத்த கார்த்தி !

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் . அதை தொடர்ந்து பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். இவர் வித்தியாசமான கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் . இவர் கதையை மிகவும் நம்பி படம் நடிப்பதால் இவரின் படம் நட்சத்திர நடிகர்கள் வெளியாகும் போது இவர் படம் வெளியாகுவது இயல்பாக இருக்கிறது . அந்த வகையில் 2019 -ஆம் இவர் நடித்த கைதி படமும் நடிகர் விஜய் நடித்த பிகில் படமும் ஒன்றாக வெளியானது . கார்த்தி நடித்த கைதி படம் விஜய் நடித்த பிகில் படத்தை விட நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் நடிகர் கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் . பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்குகிறார் .இந்த படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் நடிகை லைலா நீண்ட வருடங்களுக்கு இந்த படத்தில் நடித்து இருக்கிறார் . இந்த படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் அதில் ஒன்றில் வயதான தோற்றத்தில் நடிக்கிறார் . இன்னொரு தோற்றத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . இந்த படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக நேற்று படக்குழு அறிவித்துள்ளது . ஏற்கனவே நடிகர் கார்த்தியின் விருமன் படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கிறது .

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61 படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர் . இந்த தீபாவளிக்கு நடிகர் அஜித் மற்றும் கார்த்தி படங்கள் வருவது உறுதியாகி இருக்கிறது .

Share.