‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. இருப்பினும் டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் தியேட்டரில் ரிலீஸாகவில்லை.
கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தான் பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும், ஜனவரி 14-ஆம் தேதி சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படமும் திரையரங்குகளில் வெளியானது. ‘மாஸ்டர், ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பினால், விஷால் தனது ‘சக்ரா’ படத்தை வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யவிருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ‘ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
ஆகையால், படத்தை ரிலீஸ் செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது, இந்த இடைக்கால தடையை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆகையால், படம் ஏற்கனவே ப்ளான் செய்தபடி நாளை ரிலீஸாகுமாம். இந்த தகவலை விஷாலே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். இப்படத்தை MS.ஆனந்தன் இயக்க, டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஷ்ரதா ஸ்ரீநாத், ரோபோ ஷங்கர், மனோபாலா, கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார்கள்.
All Clear for #Chakra –
Grand Worldwide Release Tomorrow #ChakraFromTomorrow#ChakraKaRakshak#VishalChakra pic.twitter.com/eWxJKrwJ8y
— Vishal (@VishalKOfficial) February 18, 2021
All Clear for #Chakra 🎖️
Grand Worldwide Release Tomorrow #ChakraFromTomorrow#ChakraKaRakshak#VishalChakra @thisisysr @ShraddhaSrinath @ReginaCassandra @srushtiDange @AnandanMS15 pic.twitter.com/ViBOLklmoz
— Vishal (@VishalKOfficial) February 18, 2021