2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜுன், ராஜமௌலி & மாதவன்… வைரலாகும் வீடியோஸ்!
October 17, 2023 / 08:19 PM IST
|Follow Us
2021-ஆம் ஆண்டிற்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த தமிழ் படத்துக்கான விருது ‘கடைசி விவசாயி’ படத்துக்கு என அறிவிக்கப்பட்டது. ஸ்பெஷல் மென்ஷன் விருது ‘கடைசி விவசாயி’ (தமிழ்) படத்தில் நடித்த நடிகர் நல்லாண்டிக்கு என அறிவிக்கப்பட்டது.
சிறந்த ஸ்டன்ட் இயக்குநருக்கான விருது ‘RRR’ (தெலுங்கு) படத்தில் பணியாற்றிய கிங் சாலமனுக்கு என அறிவிக்கப்பட்டது. சிறந்த நடன இயக்குநருக்கான விருது ‘RRR’ (தெலுங்கு) படத்தில் பணியாற்றிய பிரேம் ரக்ஷித்துக்கு என அறிவிக்கப்பட்டது. சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்கான விருது ‘RRR’ (தெலுங்கு) படத்தில் பணியாற்றிய வி.ஸ்ரீநிவாஸ் மோகனுக்கு என அறிவிக்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான விருது ‘புஷ்பா’ பார்ட் 1 (தெலுங்கு) படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு என அறிவிக்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘புஷ்பா’ பார்ட் 1 (தெலுங்கு) படத்தில் பணியாற்றிய தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு என அறிவிக்கப்பட்டது. சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது ‘RRR’ (தெலுங்கு) படத்தில் பணியாற்றிய எம்.எம்.கீரவாணிக்கு என அறிவிக்கப்பட்டது.
சிறந்த பின்னணி பாடகிக்கான விருது ‘இரவின் நிழல்’ (தமிழ்) படத்தில் ‘மாயவா’ என்ற பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு என அறிவிக்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ‘RRR’ (தெலுங்கு) படத்தில் ‘கொமுரம் பீமுடோ’ என்ற பாடலை பாடலை பாடிய கால பைரவாவுக்கு என அறிவிக்கப்பட்டது.
சிறந்த ஹிந்தி படத்துக்கான விருது ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’ படத்துக்கு என அறிவிக்கப்பட்டது. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருது ‘RRR’ (தெலுங்கு) படத்துக்கு என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 17-ஆம் தேதி) தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. அங்கு எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.