தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ‘அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வந்த படம் ‘புஷ்பா’.
இதன் முதல் பாகம் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் ரிலீஸானது. இப்படம் சூப்பர் ஹிட்டானது.
சமீபத்தில், ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை சுகுமார் இயக்க, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் மலையாள ஹீரோக்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் நடிக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் GLIMPSE-ஐ நடிகர் அல்லு அர்ஜுனின் பர்த்டே ஸ்பெஷளாக ரிலீஸ் செய்தனர். இந்த GLIMPSE படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்வதற்காக பயணம் செய்த பஸ் நார்கட்பள்ளியில் இன்னொரு பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்விபத்தில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால், உடனே அனைவரையும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.