அடேங்கப்பா… ரஷ்யாவில் 25 நாட்களில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ செய்த வசூல் இவ்ளோவா?

  • January 2, 2023 / 08:01 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ‘அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வந்த படம் ‘புஷ்பா’. இதன் முதல் பாகம் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் ரிலீஸானது.

இப்படத்தினை சுகுமார் இயக்க, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் மலையாள ஹீரோக்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் நடித்திருந்தார்.

மேலும், மிக முக்கிய சுனில், தனஞ்ஜெய், ராவ் ரமேஷ், அனுஷயா பரத்வாஜ், அஜய் கோஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா’ என்ற ஐட்டம் பாடலுக்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நடனமாடியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.

கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 8-ஆம் தேதி ரஷ்யாவில் இந்த படம் ரிலீஸானது. தற்போது, கடந்த 25 நாட்களில் இப்படம் ரஷ்யாவில் ரூ.1.13 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus