ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டும் அமலா !

  • February 21, 2023 / 07:45 PM IST

2010-ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகை அமலா பால் . வீரசேகரன் படத்தில் இவர் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் மைனா . அதன் பிறகு தெய்வத்திருமகள் , வேட்டை , தலைவா , வேலைஇல்லா பட்டதாரி, பசங்க 2 என்று விக்ரம் , ஆர்யா , விஜய் , தனுஷ் , சூர்யா என முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார் .

இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் ஆடை . இந்த படத்தை இயக்கியவர் மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னா குமார் .2009-ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி இருந்தது . இந்த படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்தது சர்ச்சை ஆனது . இந்த படத்திற்கு பிறகு அமலா பால் குட்டி ஸ்டோரி என்கிற அந்தாலஜி படத்தில் நடித்து இருந்தார் . அதன் பிறகு டீச்சர் , கிறிஸ்டோபர் , கேடவர் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார் .


தற்போது இவர் ஆடு ஜீவிதம் , அதோ அந்த பறவை போல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் , மேலும் கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் படமான போலா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் .

இந்நிலையில் அமலா தற்போது ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உடையவராக மாறி உள்ளார் . அந்த வகையில் தற்போது இவர் இந்தோனேசியாவில் இருக்கும் Pura Gunung Kawi Sebatu என்ற கோவிலின் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus