தனது ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங் மீது அமலா பால் கொடுத்த பரபரப்பு புகார்… கைது செய்த போலீசார்!

சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவர் நடிப்பில் ‘கடாவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்), ‘டீச்சர்’ (மலையாளம்), ‘கிறிஸ்டோபர்’ (மலையாளம்) என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘கடாவர்’ என்ற படம் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸானது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நடிகை அமலா பால் தனது ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங் மீது விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது. அவர் கொடுத்த புகார் மனுவில் “பவ்நிந்தர் சிங்குடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன்.

பின்னர், வீடு ஒன்றை எடுத்து தங்கி, தொழிலும் செய்து வந்தோம். அதன் பிறகு எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம். இப்போது நாங்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஸ்டில்ஸை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்வேன் என பவ்நிந்தர் சிங் மற்றும் அவரது உறவினர்கள் என்னை மிரட்டி பண மோசடி செய்ததுடன், மனரீதியாகவும், தொழில்ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தல் கொடுத்து வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளதாம். இதனைத் தொடர்ந்து போலீசார் 12 பேர் மீது 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின், இன்று காலை பவ்நிந்தர் சிங்கை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனராம்.

Share.